முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா செல்ல வேண்டாம்: இங்கிலாந்து வேண்டுகோள்

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், அக்.4 - அமெரிக்காவில் சுற்றுலா தலங்கள் உள்பட அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதால் அங்கு செல்ல வேண்டாம் என்று இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள்  தங்கள் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளன. அமெரிக்காவில் குறைந்த வருமானம் உள்ளவர்கள் மற்றும் முதியோருக்கு தனியாக மருத்துவ காப்பீடு திட்டத்தை அதிபர் ஒபாமா கொண்டு வந்துள்ளார். இத்திட்டத்துக்கு அரசு பணத்தை வீணாக்கக் கூடாது. அவரவருக்கு தேவையான காப்பீடு திட்டத்தை அவர்களே தேர்ந்தெடுத்குமாறு மக்களை விட்டுவிட வேண்டும் என்று குடியரசு கட்சி வலியுறுத்தியது. இந்நிலையில் அவசர நிதி மசோதாவை நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் அரசு கொண்சு வந்தது. இதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. நிதி நெருக்கடியால் பல்வேறு துறைகளுக்கு நிதி          ஒதுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், அமெரிக்க அரசு அலுவலகங்கள், நிறுவனங்களை  மூடுமாறு ஒபாமா உத்தரவிட்டார்.      

      எல்லை பாதுகாப்புப்படை, விமான போக்குவரத்து கட்டுப்பாடு, உணவுத் துறை போன்றவைகள் தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தோனேஷியா, புருனி ஆகிய நாடுகளுக்கு செல்லவிருந்த ஒபாமா தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். அமெரிக்காவில் பல அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.  எனவே அமெரிக்காவில் சுற்றுலா தலங்கள் உள்பட அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதால் அங்கு செல்ல வேண்டாம் என்று இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள்  தங்கள் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago