முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாலுவுடன் ஆதரவாளர்கள் கூட்டணி கட்சியினர் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2013      ஊழல்
Image Unavailable

 

பாட்னா, அக்.5 - ராஞ்சி சிறையில்  அடைக்கப்பட்டுள்ள  பீகார் மாநில முன்னாள் முதல் அமைச்சர் லாலு பிரசாத் யாதவை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்துப் பேசினர். 

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்குள்ள சிறைக் கைதிகளுக்கு அவர் பாடம் நடத்தினார்.  அவர் முதல்வராக இருந்தபோது கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் முறைகேடு நடந்தது என்று புகார் எழுந்தது. இதையடுத்து லாலு பிரசாத்,  முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்ட 45 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து லாலு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவரது மனைவி ராப்ரிதேவி முதல்வரானார். 

கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் லாலு பிரசாத், ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்ட 45 பேரும் குற்றவாளிகள் என்றும் லாலுவுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதமும்  வழங்கி கோர்ட்  தீர்ப்பளித்தது. இதையடுத்து லாலு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவர் எம்.பி. பதவியை இழந்தார். தேர்தலிலும்  போட்டியிட முடியாது என்று கூறப்படுகிறது.

ஜெகநாத் மிஸ்ராவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 2லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. லாலுவின் நெருங்கிய நண்பரான ஜெகதீஷ் சர்மாவுக்கு  4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. லாலுவுக்கு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் ஏ கிளாஸ் வசதி  செய்து கொடுக்கப்பட்டுள்ளது. படுக்கை வசதி, மின்விசிறி, பத்திரிகைகள் உள்ளிட்ட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் அவர் சக கைதிகளுக்கு பாடம் நடத்துவதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.  

அவர்தான் எங்கள் தலைவர், அவர் எங்களை வழி நடத்துவார் என்று அவரது மனைவி ராப்ரி தேவி கூறினார். தண்டனையை எதிர்த்து  வரும் 17_ம் தேதி  ராஞ்சி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்ய லாலு திட்டமிட்டுள்ளார்.  அவரது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் அவரை சந்தித்து வருகின்றனர். ராம்விலாஸ் பஸ்வான் நேற்று அவரை சந்தித்துப் பேசினார். அவர் சிறையில் இருந்தாலும், அவரது கட்சியுடனான உறவை துண்டிக்க மாட்டோம் கூட்டணி தொடரும் என்றும் பஸ்வான் கூறினார்.     

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony