முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூலவர்கள் சன்னதியில் வெள்ளி திருவாச்சி அமைக்கும் பணி

வெள்ளிக்கிழமை, 13 மே 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம்,மே.13 - திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் கோயிலில் மூலவர்கள் முன்பு 125 கிலோ எடையில் வெள்ளி திருவாச்சி அமைக்கும் பணி நேற்று துவங்கியது. முருகப் பெருமானின் முதல் படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஜூன் 6ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக ரூ. 5 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளி இருக்கும் மூலவர்களுக்கு வெள்ளி திருவாச்சி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. 

கோயில் மூலஸ்தானத்தில் மூலவர்கள் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் திருவுருவங்கள் மலையின் அடிவார பாறையில் குடைந்து வடிவமைக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். மூலவர்கள் முன்புறம் வெள்ளி திருவாச்சி அமைப்பதற்காக முடிவு செய்து 5 மூலவர்கள் முன்பும் 125 கிலோ எடையில் 5 வெள்ளி திருவாச்சிகள் தயாரிக்கும் பணி நேற்று துவங்கியது. 

முதல்கட்டமாக கோயில் உண்டியலில் ஏற்கனவே பக்தர்கள் வழங்கிய வெள்ளி பொருட்களை உருக்கும் பணிக்காக வெள்ளி பொருட்கள் பணியாளர்களால் கோயில் துணை கமிஷனர் செந்தில் வேலவன், நகை சரிபார்க்கும் அதிகாரி செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் பிரித்து எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வெள்ளி உருக்கப்பட்டு தகடுகளாக்கி அதன் பின்னர் திருவாச்சி செய்யப்படவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago