முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லைப் பாதுகாப்பில் சமரசம் இல்லை: பிரணாப்

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

பிரசெல்ஸ், அக்.6 - நாட்டின் எல்லைப் பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார். பெல்ஜிய.ம் சென்றுள்ள அவர் யூரோ நியூஸ் தொலைக்காட்சிக்கு  அளித்த பேட்டி:

சலுகை திட்டங்கள்தான் நிதிப் பற்றாக்குறை மற்றும் பணவீகக்கத்துக்கு காரணம் என்று கூறப்படுவதை ஏற்க முடியாது. வேகமாக வீழ்ச்சி அடைந்து வரும் மொத்த உள்நாட்டுஉற்பத்தியை நிலைநிறுத்துவதற்காக எல்லா நாடுகளும் செய்வதுபோலத்தான் நாங்களும் சலுகைத் திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.  அதற்குத் தற்காலிகப் பலனாக 2007_2008 நிதியாண்டில் 6.7 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உறபத்தி 2009_2010_ல் 8.7 சதவீதமாகவும், 2010_2011_ல் 9.3 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. இருந்தாலும் அடுத்த நிதியாண்டில் மறுபடியும் சரியத் தொடங்கியது. 

உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிதான் அதற்குக் காரணம். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் உலகப் பொருளாதார வீழ்ச்சி தந்த அதிர்ச்சியிலிருந்து, நாம் இன்னும் மீளவில்லை. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்துக்கும் பொருந்தும்.

எல்லை தாண்டிபயங்கரவாதச் செயல்களைத் தூண்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. அதனால்தான் பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களை உடனடியாக மூடுமாறு நாங்கள் கூறி வருகிறோம். பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் நாடற்றவர்கள் என்று பாகிஸ்தான் கூறுவது அர்த்தமற்றது. அந்த நாடற்றவர்கள் எனப்படுபவர்கள் ஆகாயத்திலிருந்து குதிக்கவில்லை. பாகிஸ்தானின் கட்டுபாட்டில் இருக்கும் பகுதியிலிருந்துதான் வருகிறார்கள்.

2004_ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான செயல்களில் யாரும் ஈடுபட தங்கள் மண்ணை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அளித்த வாக்குறுதியை பாகிஸ்தான் காப்பாற்றவில்லை. 1971_ம் ஆண்டு இந்திராகாந்தி_ பூட்டோ இடையிலான சிம்லா ஒப்பந்தத்தில் உறுதியளித்தபடி நல்லெண்ண அடிப்படையில் 81 ஆயிரம் போர்க் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

இந்தியாவுக்கு எல்லையை விரிவுபடுத்தும் ஆசையோ, தனது சித்தாந்தங்களை பிழறநாடுகளில் பரப்பும் எண்ணமோ கிடையாது. நாட்டின் எல்லைப் பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்