முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வ.மாகாண முதல்வராக நாளை விக்னேஸ்வரன் பதவியேற்பு

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, அக். 6 - இலங்கையின் வடக்கு மாகாண முதல்வராக தேர்ந்தெடுக்க ப்பட்டுள்ள விக்னேஸ்வரன் நாளை திங்கட் கிழமை பதவியேற்கிறார். 

இலங்கையில் கடந்த மாதம் 21 ம் தேதி நடைபெற்ற மாகாண கவுன்சிலுக்கான தேர்தலில் வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிக இடங்களில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து இந்த கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண முதல்வராக இலங்கை சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி விக்னேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டார். 

விக்னேஸ்வரனுக்கு நாளை அதிபர் ராஜபக்சே பதவி பிரமாணம் செய்து வைப்பார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். மாகாண கவுன்சில் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வருகிற 11 ம் தேதி யாழ்ப்பாணத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவியேற்று கொள்வர் என்றும் அவர் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுனராக பொறுப்பு வகிக்கும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி சந்திரசிரியின் செயல்பாடு தங்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்பதால் வடக்கு மாகாண முதல்வருக்கு அவர் பதவி பிரமாணம் செய்து வைப்பதை தாங்கள் விரும்பவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் ராஜபக்சேவிடம் தெரிவித்தனர். இதையடுத்து விக்னேஸ்வரனுக்கு அதிபர் ராஜபக்சேவே பதவி பிரமாணம் செய்து வைப்பதாக சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். 

தேர்தலின் போது ராஜபக்சேவின் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஆளுனர் சந்திரசிரி மீது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது. இறுதி கட்ட போரின் போதும் யாழ்ப்பாண பகுதியின் தளபதியாக பணியாற்றியவர் சந்திரசிரி என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்