முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லல்லுவுக்கு ராஜ உபச்சாரம்: ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு

ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2013      ஊழல்
Image Unavailable

 

ராஞ்சி, அக். 6 - ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள பீகார் முன்னாள் முதல்வர் லல்லுவுக்கு சிறையில் விதிகளை மீறி சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருப்பதை எதிர்த்து ராஞ்சி கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

பீகாரில் ரூ. 950 கோடி மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லல்லுவுக்கு ராஞ்சி சி.பி.ஐ. கோர்ட் 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 25 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து ராஞ்சியில் உள்ள மத்திய சிறையில் லல்லு அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவருக்கு கேபிள் டி.வி. டைல்ஸ் போடப்பட்ட டாய்லட், பாத்ரூம் வசதி, வீட்டு சாப்பாடு, யாரை வேண்டுமானாலும் பார்க்கும் வசதி, கூப்பிட்ட குரலுக்கு ஏவல் செய்ய 2 கைதிகள் என ஏராளமான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

சிறையில் அவரை தினந்தோறும் ஏராளமான தொண்டர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் சந்தித்து பேசி வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் ராஜீவ்குமார் என்பவர் ராஞ்சி கோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, 

லல்லு சிறையில் ராஜ தர்பார் நடத்தி வருகிறார். தனக்கு ஒத்துழைக்காத சிறை அதிகாரிகளின் காக்கி சட்டையை உருவி விடுவேன் என்று மிரட்டி வருகிறார். சிறை விதிகளை மீறி ஏராளமானோர்களை சந்திக்க அனுமதி வழங்கப்படுகிறது. மற்ற கைதிகளுக்கு வாரம் ஒரு முறை கூட உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே சிறை நிர்வாகத்திற்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கைதி அறையில் இருக்காமல் சிறை கண்காணிப்பாளர் அறையிலேயே பெரும்பாலான நேரத்தை லல்லு செலவிடுவதாகவும் அந்த மனுவில் மேலும் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீது விரைவில் விசாரணை நடத்தப்படும் என ஐகோர்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்