முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

170 அத்லட்டுகள் பங்கேற்ற இஸ்பா பயிற்சி முகாம் நிறைவு

வெள்ளிக்கிழமை, 13 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, மே.13 - சர்வதேச ஓட்டப்பந்தய வீரர் ஆர்.நடராஜன் நடத்திவரும் இஸ்பா பயிற்சி முகாமில் இந்த ஆண்டில் 170 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. ஸ்பிரிண்ட் ஓட்டம் எனப்படும் குறுந்தூர ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்தவர் ஆர்.நடராஜன். சென்னையில் சுங்கத்துறையில் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் இவர், இந்தியா ஸ்போர்ட்ஸ் புரோமோஷன் அகாடமி(இஸ்பா)யின் இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்த அகாடமி சார்பாக ஆண்டுதோறும் கோடை கால அத்லடிக் சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இதன் 10வது ஆண்டு ஆகும். இம்முகாமில் ஆர்.நடராஜன் தலைமை பயிற்சியாளராக பணியாற்றுகிறார். உயரம் தாண்டுதலில் தேசிய சாதனை படைத்துள்ள என்.அண்ணாவி, டிரிபில் ஜம்பில் தேசிய சாதனை படைத்துள்ள நிசாமுதீன் ஆகியோரும் இந்த முகாமில் கலந்துகொண்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். இவர்களோடு முருகேசன், தேசிங்குராஜன் உள்ளிட்ட பயிற்சியாளர்களும் பயிற்சி அளிக்கின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி துவங்கிய பயிற்சி முகாமின் நிறைவு விழா நேற்று நடந்தது. 

இதில் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.வைத்தியநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கினார்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஏர்செல் மற்றும் வேலம்மாள் கல்வி அறக்கட்டளை ஆகியவற்றின் ஆதரவோடு நடத்தப்பட்ட இந்த முகாமின் நிறைவு விழாவில் தமிழ்நாடு அத்லடிக் சங்க தலைவர் தேவாரம்,  ஐ.ஒ.பி. பொது மேலாளர் சி.ரங்கராஜன், ஏர்செல் நிறுவன செயல் இயக்குனர் கே.வி.பி.பாஸ்கர், ஹாக்கி ஒலிம்பியன் வி.பாஸ்கரன், ஒய்.எம்.சி.ஏ.கல்லூரி முதல்வர் ஷீலா ஸ்டீபன், நிர்வாக அதிகாரி மனோகர் சாம், முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனை ஷைனி வில்சன், இந்திய அத்லடிக் அணியின் முன்னாள் பயிற்சியாளர் அறிவானந்தம், டாக்டர் கண்ணன்புகழேந்தி, திரைப்பட நடிகர் மதன்பாப் உள்பட பலர் கலந்துகொண்டு இந்த முகாமின் சிறப்பம்சங்களை எடுத்துக்கூறினர். 

இவ்விழாவின் போது இஸ்பாவின் இணையதளம் துவங்கப்பட்டது. அத்லடிக் விளையாட்டு தொடர்பான தகவல்களுக்கு  சூசூசூ.டுஙூஙீஹடுடூக்ஷடுஹ.ஷச்ஙி என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சி முகாம் நிறைவு விழாவின் துவக்கத்தில் இஸ்பா இயக்குனர் ஆர்.எம்.லட்சுமணன் வரவேற்றார். முடிவில் ஆர்.நடராஜன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்