முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரப்ஜித்சிங்கை கொன்றவர்களை தாக்கிய பாக். சிறை வார்டன்கள்

ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

லாகூர், அக்.7 - பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப் பட்டிருந்த சரப்ஜித்சிங் என்பவரை அங்கு அடைக்கப்பட்டிருந்த சக கைதிகள் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவம+னையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரை பாகிஸ்தானை சேர்ந்த தூக்கு தண்டனை கைதிகள் அமீர்தம்பா, முடாசர் ஆகியோர் கூரிய ஆயுதங்களால் தாக்கினர். இதையடுத்து அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் காக் லால்பத் சிறைக்குள் பலத்த காவலையும் மீறி செல்போன்கள் மற்றும் போதை பொருள்கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கைதிகள் அறைகளில் வார்டன்கள் சோதனையிட்டனர். அப்போது தூக்குத் தண்டனை கைதிகளிடம் செல்போன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட தகராறில் அவர்கள் இருவரையும் வார்டன்கள் தாக்கினர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமீர்தம்பா முடாசர் மற்றும் தூக்குத் தண்டனை  கைதிகள் சிறைக்குள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று கூறப்படுகிறது. இதை சிறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

கைதிகளின் அறைகளில் செல்போன்கள் இருந்ததை கண்டுபிடித்தது  உண்மை, ஆனால் அவர்கல் மீது தாக்குதல் எதுவும் நடத்தவில்லை. அவர்கள் துன்புறுத்தப்படவும் இல்லை என்றும் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்