முக்கிய செய்திகள்

பின்லேடன் கொலை: ஐ.நா. விசாரிக்க கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 13 மே 2011      உலகம்
Omar-Bin-Laden-Son

வாஷிங்டன்,மே.13 - பின்லேடன் கொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது மகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அல்கொய்தா தலைவர் பின்லேடனை இஸ்லாமாபாத் நகரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள அபோட்டாபாத் நகரில் கடந்த வாரம் அமெரிக்க படைகள் சுட்டு கொன்றன. இந்த சம்பவத்துக்கு பின்லேடனின் மகன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக பின்லேடனின் மகன்கள் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் எங்களது தந்தையை அமெரிக்க ராணுவத்தினர் கொன்றுள்ள செயல் மிகவும் அத்து மீறியதாகும். அவரது உடலை கடலில் வீசியதும் கண்டனத்துக்குரியது. எங்களது தந்தையின் மரண பின்னணி குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரிக்க வேண்டும். அரசியல் பிரச்சினைகளுக்கு இப்படிப்பட்ட படுகொலைகள் தீர்வாக இருக்க முடியாது. எங்களது தந்தையின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: