முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாய்மர படகுப் போட்டி: பதக்கங்களை குவித்த இந்திய வீரர்கள்

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

திருவொற்றியூர், அக். 9 - சென்னையில் நடைபெற்ற ரேமண்ட் இந்தியா சர்வதேச பாய்மரப் படகு போட்டியில் இந்தியா, மலேசியா நாட்டை சேர்ந்த வீரர்கள் அதிகளவில் பதக்கங்களை வென்றனர். 

கடந்த மாதம் 30 ம் தேதி தொடங்கி இப்போட்டி நிறைவடைந்தது. தமிழ்நாடு பாய்மர படகோட்ட சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டி தொடரில் இந்தியா, ஸ்லோலேனியா, அயர்லாந்து, நியுசிலாந்து, மலேசியா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். ஆப்டிமிஸ்ட் லேசர் 4.7, 29 ஈஆர் ஜாயிண்ட் ரேஸ் ஆகிய நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஒட்டுமொத்த பிரிவில் முகமது உஜைர்(மலேசியா), தசூப் ஐமன்(மலேசியா), விஷ்ணு சரவணன்(இந்தியா) ஆகியோரும், பெண்கள் பிரிவில் நட்சியா நபிலா(மலேசியா), ஜெயலட்சுமி(இந்தியா), நூர் நபிலா(மலேசியா) ஆகியோரும் ஜூனியர் பிரிவில் சித்ரேஷ் தத்தா(இந்தியா), சப் ஜூனியர் பிரிவில் சென்னையை சேர்ந்த நவீன் பிரபாகர்(இந்தியா) ஆகியோரும் வெற்றி பெற்று பதக்கங்களை தட்டி சென்றனர். 

ஒட்டு மொத்த பிரிவில் உபமன்ய தத்தா(இந்தியா) தீர் சிங்கி(இந்தியா), ஜானகி பாலசந்தர்(இந்தியா) ஆகியோரும், பெண்கள் பிரிவில் ஜானகி பாலசந்தரும் வெற்றி பெற்று பதக்கங்களை வென்றனர். 

தமிழ்நாடு அரசு சுற்றுலா மற்றும் கலாச்சார துறை முதன்மை செயலாளர் ஹேமிந்த் சின்கா தலைமை விருந்தினராகவும், ராணுவ படை பிரிவு லெப்டினன்ட் ஜெனரல் மித்தல், இந்திய கடற்படை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிராந்திய அதிகாரி மகாதேவன், கடற்படை லெப்டினன்ட் கமாண்டர் அபிலேஷ் டோமி, ரேமண்ட் இந்தியா நிர்வாக இயக்குனர் மிருண்ராய் முகர்ஜி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்