முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவாவில் முறைகேடு: முன்னாள் முதல்வர்கள் மீது வழக்கு

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2013      அரசியல்
Image Unavailable

 

பனாஜி, அக்.9 - கோவா மாநிலத்தில் முன்னாள் முதல்வர்கள் மீது சுரங்க முறைகேடு தொடர்பாக ஊழல் தடுப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவாவில் முன்னாள் முதல்வர்கள்  திகம்பரகாமத், பிரதாப்சிங் ரானே, ஆகியோர் மீது ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் சுரங்க முறைகேடு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சோம்நாத் சுவார்கர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இகில் அரசியல் செல்வாக்கு உள்ள சுரங்க அதிபர் பிர்பல் ஹடே மற்றும் 6 பேருக்கு தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு சுரங்கம் தோண்டி எடுப்பது தொடர்பாக தடையில்லா சான்றிதழ் வழங்கியதன் மூலமாக கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. கோவாவில் நீண்ட காலமாகவே அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சுரங்க அதிபர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆனால் அரசியல் தலைவர்களின் தலையீடு காரணமாக நடவடிசிக்கை எடுப்பதில் சுணக்கம் காட்டப்பட்டது. இந்நிலையில் ஊழல் தடுப்பு போலீஸாரின் நடவடிக்கையால் சுரங்க துறை  உயர் அதிகாரிகளுக்கும், ஊழலில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. 

அதன் அடிப்படையில் சுரங்க துறை செயலாளர்கள் அரவிந்த் லோலியேக்கர், பிங்கி, அதிகாரிகள் ஷெட் கோங்கர், ஷியாம்ஷரவத், சோபனா ரிவோங்கர் மற்றும் வனத்துறை  முன்னாள் அதிகாரி சசிகுமார், ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தற்போதைய செய்தித் தொடர்பாளர் சுதீப் தமாங்கர் 2011 ம் ஆண்டு கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவா மாநிலத்தில் முதல் முறையாக  அரசியல்வாதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

                           

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்