முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் கடும் நடவடிக்கை

புதன்கிழமை, 9 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், அக்.10 - ஆந்திராவில் போராட்டம் என்ற பெயரில் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.  சேதம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு அரசின் முதன்மைச் செயலாளர் மொஹன்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இவ ர் அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் வீடியோ கான்பரன்சிங் மூலம் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது: 

மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம், ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சமூக விரோதிகள் சிலர் போராட்ட போர்வையில் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் நாசவேலைகளில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வருகின்றன. சட்டம்_ ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை  எடுக்க வேண்டும். அவர்கள் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம்.

மின்சாரம் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் துணை மின் நிலையங்களுக்கு பலத்த  பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்