முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வி.கே.சிங்குக்கு சம்மன்: ஜம்மு - காஷ்மீர் சபாநாயகர் அறிவிப்பு

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர், அக்.11 - ஜம்மு_காஷ்மீரைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு ராணுவத்தின் சார்பில் பணம் வழங்கப்பட்டதாக இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி வி.கே.சிங் கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக அவரை நேரில் அழைத்து விளக்கம் கேட்கப்போவதாக சட்ட சபை சபாநாயகர் முபாரக் குல் தெரிவித்தார். 

சட்ட சபையில் இந்த பிரச்சனையை கிளப்பிய பாஜக, மக்கள் ஜனநாயகக் கட்சி, தேசிய சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். வி.கே.சிங்கை நேரில் அழைத்து விளக்கம் கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டனர்.  

வி.கே. சிங்கை மிக விரைவில் அழைத்து  விளக்கம் கேட்கப்போவதாக சபாநாயகர் முபாரக் குல் அறிவித்தார். அதற்கான கால வரையை அறிவிக்க அவர் மறுத்துவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக வி.கே.சிங்குக்கு விளக்கம்கேட்டு கடிதம் எழுதுவதாக முன்னர் கூறிய கருத்திலிருந்து பின் வாங்கக் கூடாது என பாஜக ,தேசிய சிறுத்தை கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.  ஆனால் விளக்கம் கேட்டு கடிதம் எழுதுவதற்குப் பதிலாக அவருக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என ஆளும் தேசிய மாநாட்டு கட்சி உறுப்பினரும், அமைச்சருமான மிர்சைபுல்லா வலியுறுத்தினார். இதற்கு மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். பின்னர் சபை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

வி.கே.சிங்கை நேரில் அழைத்து விளக்கம் கேட்பதா அல்லது கடிதம் மூலம் விளக்கம் கேட்பதா என்றுமுடிவு செய்ய வாக்கடுப்பு நடத்தலாம் என்று எதிர்க்கட்சி தலைவர் மெகபூபா முக்தி யோசனை  கூறினார். பின்னர் சபையில் அமளி நிலவியதால் அவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்தி வைத்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்