முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உருண்ட முக்கிய தலைகள் - மிரண்டுபோன கருணாநிதி

வெள்ளிக்கிழமை, 13 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே 14 - நடந்துமுடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் தோல்வியை தழுவினர். இதனால் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி மிரட்சி அடைந்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் தமிழக நிதியமைச்சர் க.அன்பழகன் வில்லிவாக்கம் தொகுதியில் தோல்வியடைந்தார். இதேபோல தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம் சங்ககிரியிலும், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அருப்புக்கோட்டையிலும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களிடம் தோல்வியை தழுவினார்கள். மேலும் பரிதி இளம்வழுதி, பொன்முடி, பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோரும் தோல்வியடைந்தனர். சட்டமன்ற சபாநாயகர் ஆவுடையப்பனும் தான் போட்டியிட்ட தொகுதியில் படுதோல்வி அடைந்தார். 

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவரும் மைலாப்பூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர்(அறந்தாங்கி) ஆகியோரும் இந்த தேர்தலில் பெரும் தோல்வி அடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்