முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா தனி மாநிலம்: இன்று அமைச்சர்கள் குழு கூட்டம்

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக். 11 - தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கும் மத்திய அமைச்சரவையின் முடிவை செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. 

இக்குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே, பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், மத்திய சுகாதார துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜெய்பால்ரெட்டி, கிராமப்புற வளர்ச்சி துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மத்திய பணியாளர், பயிற்சி துறை இணையமைச்சர் வே. நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராக குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். முதலாவது கூட்டம் என்பதால் இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. 

மத்திய அமைச்சர்கள் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள செயல்பாட்டு நெறிமுறைகளில் கூறியிருப்பதாவது, ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள தேர்தல் தொகுதிகள் அடிப்படையில் தெலுங்கானா பகுதிக்கான எல்லையை நிர்ணயித்தல், புதிய மாநிலத்இதல் நீதி, நிர்வாக, சட்டப்பூர்வ அந்தஸ்தை அவை தொடர்புடைய அமைப்புகளுக்கு வழங்குதல், ஐதராபாத்தை பொது தலைநகராக 10 ஆண்டுகளுக்கு வைத்து கொண்டு ஆந்திரமும், தெலுங்கானாவும் இணைந்து செயல்பட உத்திகளை வகுத்தல், நீதி, நிதி, நிர்வாக நடவடிக்கை மேற்கொள்ளுதல், தனி மாநிலம் உருவாக்கப்படுவதால் பின்தங்கிய பகுதிகள், மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி நடவடிக்கைகளை திட்டமிடல், சட்டம் ஒழுங்கு குடிமக்களின் பாதுகாப்பு, நல்லிணக்கத்தை பேணி காக்கும் வழிமுறைகளை வகுத்தல், நிலம், நீர், மின்சாரம், நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்ற வளங்களை பரஸ்பரம் ஆந்திரமும், தெலுங்கானாவும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புகளை கண்டறிதல் போன்றவற்றை மத்திய அமைச்சர்கள் குழு ஆராயும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago