முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாட்மிண்டன் சங்கத்துக்கு எதிராக ஜூவாலா கட்டா மனு

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, அக். 11 - இந்திய பாட்மிண்டன் சங்கத்தின் வாழ்நாள் தடை பரிந்துரையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் பாட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா மனு தாக்கல் செய்தார். 

பாட்மிண்டன் லீக் போட்டியின் போது பங்கா பீட்ஸ் அணிக்கு எதிராக தனது அணி வீரர்கள் விளையாடுவதை தடுத்ததாக ஜூவாலா மீது குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்த விசாரணையை தொடர்ந்து அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கலாம் என்று பாட்மிண்டன் சங்கத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை செய்தது. இதனை எதிர்த்து ஜூவாலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஐகோர்ட் நீதிபதி வி.கே. ஜெயின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடர்பான அறிக்கை வரும் வவை, சர்வதேச போட்டிகளில் தனது பெயர் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது என்று பாட்மிண்டன் சங்கம் கடந்த 6 ம் தேதி தெரிவித்தது. 

இந்த உத்தரவையும் தன் மீது பரிந்துரை செய்யப்பட்டுள்ள வாழ்நாள் தடை உத்தரவையும் தள்ளுபடி செய்ய வேண்டும். எனது தரப்பு கருத்தை கேட்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது இயற்கையின் நீதிக்கு எதிரானது. இந்த விவகாரம் தொடர்பாக சுதந்திரமான விசாரணையை நடத்த உத்தரவிடுமாறு விளையாட்டு அமைச்சகத்துக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஜூவாலா கட்டாவின் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதை தொடர்ந்து மனு மீதான விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்திருந்தார். முன்னதாக ஜூவாலாவுக்கு வாழ்நாள் தடை விதிக்கலாம் என்று பரிந்துரைக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதனால் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 நபர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த விசாரணை குழு அறிக்கை அளிக்கும் வரை சர்வதேச போட்டிகளில் ஜூவாலா கட்டாவின் பெயர் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது என்று பாட்மிண்டன் சங்கம் தெரிவித்தது. இதனால் டென்மார்க் மற்றும் பிரெஞ்சு ஓபனில் அவர் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஜூவாலா கட்டா கோரிக்கை விடுத்தால் மத்திய விளையாட்டு அமைச்சகம் தலையிடும் என்று விளையாட்டு துறை அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்தார். ஆனால் தற்போது வரை ஜூவாலாவிடம் இருந்து எந்தவித விண்ணப்பமும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்