முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.எல்.ஏ. மனைவி சரமாரியாக குத்திக் கொலை

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக். 11 - உ.பி. மாநிலம் புலன்ட்சர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வானவர் காசி அலிம் சவுத்ரி. பகுஜன் சமாஜை சேர்ந்த இவர் 4 முறை இத்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அலிம்கான் என்று அழைக்கப்படும் இவர் மீது உ.பி.யில் பல போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. 40 வயதான ரெஹனா பேகம் என்பவரை 1990 ல் 2 வது திருமணம் செய்திருந்தார். அவர்கள் இருவரும் சம்பவத்திற்கு முதல்நாள் டெல்லி புறப்பட்டு சென்றனர். டெல்லியில் ஜாபர்பாத் பகுதியில் அலிகானுக்கு சொகுசு பங்களா உள்ளது. அங்கு ரெஹனா பேகத்தை மட்டும் விட்டு விட்டு ஹஜ் புனித யாத்திரைக்கு புறப்பட்டு சென்றார். ரெஹனா பேகம் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று காலை அவரது வீட்டுக்கு சமையல் செய்வதற்காக வேலைக்காரி வந்தார். வீட்டுக்குள் சென்ற வேலைக்காரி ரெஹனா பேகம் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அலறினார். தகவலறிந்ததும் டெல்லி கிழக்கு பகுதி போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினார்கள். ரெஹனா பேகத்தை முதுகில் 10 முறை கத்தியால் குத்தியும், மார்பில் துப்பாக்கியால் சுட்டும், கொடூரமான முறையில் கொலைகாரர்கள் கொன்றிருக்கிறார்கள். தடயவியல் சோதனையில் 2 மர்ம மனிதர்கள் ரெஹனாவை கொலை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. ரெஹனா அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டில் இருந்த எந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்படவில்லை. எனவே அலிம்கானை பழிக்குப் பழி வாங்க ரெஹனாவை கொன்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கொலை நடந்த வீட்டில் பூட்டு உடைக்கப்படவில்லை. எனவே ரெஹனாவுக்கு நன்கு அறிமுகமானவர்கள்தான் இந்த கொலையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago