முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோலார் பேனல் மோசடி: உம்மன் சாண்டியிடம் விசாரணை

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2013      ஊழல்
Image Unavailable

 

திருவனந்தபுரம், அக். 11 - சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவிகள் அமைத்து தருவதாக கேரளாவில் கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக தொழிலதிபர் பிஜூ ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதா நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உதவியதாக உம்மன்சாண்டியின் அலுவலக ஊழியர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இம்மோசடியில் பணம் கொடுத்து ஏமாந்த ஸ்ரீதரன் நாயர் என்பவர் தன்னை ராதாகிருஷ்ணனும், சரிதாவும் உம்மன்சாண்டியின் அலுவலகத்திற்கு அழைத்து சென்றதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் எர்ணாகுளத்தை சேர்ந்த ஜோ என்பவர் கேரள கோர்ட்டில் ஒரு வழக்கு தொடுத்துள்ளார். முதல்வரின் அலுவலகத்தில் வைத்துத்தான் மோசடி நடந்துள்ளது. சரிதா நாயர் அடிக்கடி உம்மன் சாண்டி அலுவலகத்துக்கு வருவார். எனவே முதல்வர் அலுவலகத்தில் உள்ள ரகசிய கேமிராக்களை பரிசோதிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு கடந்த வாரம் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது இது தொடர்பாக கேரள அட்வகேட் ஜெனரல் விளக்கமளிக்க கோர்ட் உத்தரவிட்டிருந்தது. கேரள ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் ஆஜரானார். அப்போது முதல்வர் உம்மன் சாண்டி அலுவலகத்தில் உள்ள கேமிராக்களில் பதிவான காட்சிகளை பரிசோதித்து வருவதாகவும் அந்த கேமிராக்கள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிவுகள் வந்ததும் அவற்றை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார். மேலும் முதல்வர் உம்மன் சாண்டி உட்பட 35 பேரிடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் இதில் உம்மன்சாண்டிக்கு எந்த தொடர்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே தன்னிடம் நடத்தப்பட்ட விசாரணை பற்றி உம்மன்சாண்டி கூறுகையில், என்னிடமும் எனது அலுவலகத்திலும் நடந்த விசாரணை பற்றி எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. விசாரணையில் நான் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்றார். இந்த பிரச்சினை குறித்து கேரள எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன் கூறுகையில், சோலார் பேனல் மோசடி வழக்கில் முதல்வர் உம்மன்சாண்டி மக்களை ஏமாற்றி வருகிறார். எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago