முக்கிய செய்திகள்

நாகலாந்து இடைத்தேர்தலில் எஸ்.சி. ஜமீர் தோல்வி

வெள்ளிக்கிழமை, 13 மே 2011      இந்தியா
jamir

கோகிமா, மே.14 - நாகலாந்து மாநிலத்தில் ஆங்லேண்டன் சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்மாநில முன்னாள் முதல்வர் எஸ்.சி.ஜமீர் தோல்வி அடைந்தார்.நாகலாந்து மாநிலம் ஆங்லேண்டன் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. வாக இருந்த நூங்சிஷெண்பா கடந்த ஆண்டு மரணமடைந்தார். காலியாக இருந்த இந்த தொகுதிக்கு கடந்த 7ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதல்வருமான எஸ்.சி.ஜமீர் போட்டியிட்டார். இந்த தேர்தலில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. நாகலாந்தில் ஆளும் நாகா மக்கள் முன்னணி வேட்பாளர் டோஷிகோபா லாங்குமேரை காட்டிலும் 1300 ஓட்டுகள் குறைவாக பெற்று ஜமீர் தோல்வி அடைந்தார். இதே தொகுதியில் இவர் ஏற்கனவே பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் கூட இந்த முறை தோல்வியை தழுவினார். கடந்த 10 ஆண்டு காலமாக ஜமீர் கோவா, மகராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கவர்னராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்படத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: