முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடத்தப்பட்ட லிபியா நாட்டு பிரதமர் அலி ஜிடான் விடுதலை

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

திரிபோலி, அக்.11 - லிபியா நாட்டு பிரதமர் அலி ஜிடானை பயங்கர ஆயுதக் கும்பல் கடத்திச் சென்று பின்னர் விடுதலை செஏய்துள்ளது. 

லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த கடாபிக்கு எதிராக கடந்த 2011_ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உள்நாட்டு புரட்சி ஏற்பட்டது. அதன்பின்னர் கடாபி தலைமறைவானார். புரட்சியாளர்கள் அவரைப் பிடித்து 2011_ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20_ம் தேதி அடித்துக் கொன்றனர். இதனால் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

அதன்பிறகு இடைக்கால அரசு நிர்வாகப் பொறுப்பை ஏற்றது. லிபியா பிரதமராக அலி ஜிடான் பொறுப்பேற்றார். அவர் திரிபோலியில் உள்ள கொரிந்தியா என்ற நட்சத்திர ஹோட்டலில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார். அந்த ஹோட்டலைச் சுற்றி பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. அப்போது பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் பிரதமர் அலிஜிடானை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனால் பாதுகாப்ப வீரர்கள், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பிரதமரை கைது செய்து அழைத்துச் சென்றதாக சிலர் கூறினர். ஆனால் பிரதமரை தீவிரவாதிகள் கடத்தியதாக நீதித் துறை அமைச்சர் கூறினார். சில நாள்களுக்கு முன்னர் திரிபோலியில் அல் கய்தா தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவரை அமெரிக்கப் படைகள் கொன்றனர், அதற்குப் பழிக்குபழியாக லிபியா பிரதமர் கடத்தப்பட்டதாக  தகவல்கள் வெளியாகின.

லிபியாவில் கடாபி ஆட்சி முடிந்ததும் இஸ்லாமிய புரட்சியாளர்களுக்கும், பழங்குடியின போராட்டக்காரர்களுக்கும் மத்தியில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.  இதில் இரு தரப்பினரும் ஒவ்வொரு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். அரசியல் ஸ்திரமற்ற நிலையால் பிரதமர் கடத்தப்பட்டுள்ளார். இதற்கிடையே அந்த கடத்தல் கும்பல் பிரதமர் அலி ஜிடானை விடுதலை செய்தது.

 

         

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago