முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீமாந்திராவில் ஸ்டிரைக் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2013      அரசியல்
Image Unavailable

 

சீமாந்திரா, அக். 11 - ஆந்திர மாநிலம் சீமாந்திரா பகுதியில் மின்சார ஊழியர்கள் நடத்தி வந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. ஆந்திராவை தாக்கப் போகும் புயலை கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள். இன்று காலை 6 மணிக்கு அவர்கள் பணிக்கு திரும்புவதால் அம்மாநில மக்கள் ஓரளவு நிம்மதியடைந்துள்ளனர். 

ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து விட்டது. இதை எதிர்த்து இம்மாநிலத்தில் உள்ள சீமாந்திரா பகுதி மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்கள் கடும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த மாநிலத்தில் மொத்தம் 42 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டால் அந்த மாநிலத்திற்கு 17 எம்.பி. தொகுதிகள் போய் விடும். மேலும் மாநிலம் பிரிக்கப்படுவதால் பல பாதிப்பு ஏற்படும் என்று ராயலசீமா, கடலோர ஆந்திர மக்கள் கருதுகிறார்கள். அதனால்தான் போராட்டம் நீடித்து வருகிறது. இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் முதல்வர் கிரண்குமார் ரெட்டியே ஆதரவாக இருக்கிறார். மற்ற தலைவர்களை போல இவரும் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். பதவியை ராஜினாமா செய்ய கூட தயார் என்று கூட இவர் அறிவித்து விட்டார். இதனால் தமிழக ஆளுனராக இருக்கும் ரோசய்யாவை மீண்டும் ஆந்திர முதல்வராக்கலாமா என்று கூட மத்திய அரசு யோசித்தது. ஆனால் இந்த யோசனையை ரோசய்யா ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மீண்டும் ஆந்திர முதல்வராக அவருக்கு விருப்பமில்லை என தெரிகிறது. 

இந்த நிலையில் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மின் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டம் நேற்று 6 வது நாளாக நீடித்தது. இதனால் 13 மாவட்டங்கள் இருளில் மூழ்கின. மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகி போனார்கள். இந்த நேரத்தில் ஆந்திராவை புயலும் தாக்கப் போகிறது என்ற செய்தி வெளியானது. அதாவது வரும் சனிக்கிழமை ஆந்திராவை புயல் தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இதனால் அரண்டு போனார் மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி.உடனே மின்சார ஊழியர்கள், சங்க பிரதிநிதிகளை அவர் அழைத்து பேச்சு நடத்தினார். புயல் வரப் போகிறது. நீங்களும் வேலை நிறுத்தத்தை தொடர்ந்தால் மாநிலமே இருளில் மூழ்கி விடும் என்று அவர் கவலை தெரிவித்தாராம். இதை ஏற்றுக் கொண்ட மின் ஊழியர்களின் சங்க பிரதிநிதிகள் தற்காலிகமாக வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற ஒப்புக் கொண்டனர். புயலை கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு அவர்கள்வந்துள்ளனர். இது தற்காலிகமான முடிவுதான். எந்த நேரத்திலும் மீண்டும் வேலைநிறுத்தத்தை தொடங்குவோம் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். புயலை கருத்தில் கொண்டு வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தும் அவர்கள் இன்று காலை 6 மணிக்கு பணிக்கு திரும்புகிறார்கள். அப்படி ஒரு உறுதிமொழியை முதல்வரிடம் அவர்கள் கொடுத்துள்ளனர். மத்திய அரசை தண்டிப்பதற்காகவே இவர்கள்வேலை நிறுத்தபோராட்டம் தொடங்கினர். ஆனால் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு தங்கள் முடிவை தற்காலிகமாக மாற்றிக் கொண்டு விட்டனர். இதன்படி ஆயிரக்கணக்கான மின் ஊழியர்கள் இன்று பணிக்கு திரும்புவதால் மக்கள் ஓரளவு நிம்மதியடைந்துள்ளனர். 

இதனிடையே தெலுங்கானா மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சந்திரபாபு நாயுடு டெல்லியில் 4 வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார். இந்த விஷயத்தில் உண்ணாவிரதம் இருந்த ஜெகன்மோகன் ரெட்டியை போலீசார் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்தனர். அப்போது டாக்டர்கள் ஜெகன்மோகன் ரெட்டி உடல் நலத்தை பேண வேண்டும். சாப்பிடாமல் இருக்க கூடாது என்று எச்சரித்தார்களாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago