முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லால் மசூதி வழக்கில் முஷாரப் மீண்டும் கைது

வெள்ளிக்கிழமை, 11 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,அக்.12 - பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் மசூதி தாக்குதல் வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 

பாகிஸ்தானில் கடந்த 2007_ல் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டது தொடர்பாக முன்னாள் அதிபர் முஷாரப் மீது தேச துரோக வழக்கு, கொலை சதி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டார். 

இந்த நிலையில் பலுஸ்சிஸ்தான் பழங்குடி இன தலைவர் நவாப் அக்பர் கொல்லப்பட்ட வழக்கில் முஷாரப்புக்கு தொடர்பிருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முஷாரப்புக்கு நேற்று ஜாமீன் கிடைத்தது. இதனால் அவர் பாகிஸ்தானை விட்டு வெஅளிநாடு செஏல்லும் அனுமதி கிடைக்கும் என்று அவ்ரது வக்கீல் தெரிவித்தார். 

இந்த நிலையில் லால் மசூதி வழக்கில் அவரது பெயர் சேர்க்கப்பட்டது. இந் நிகழ்வில் இஸ்லாமிய மத தலைவர் அப்துல் ரஷீத் , அவரது தாயார் ஆகியோர் கொல்லப்பட்டனர். இது குறித்து அவரது மகன் முஷாரப் மீது நட்வடிக்கை வ்ழக்கு தொடர்ந்திரு ந்தார். இந்த வழக்கில் கைது செய்ய கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி ஜாமீன் கிடைத்த சிலமணி நேரங்களில் முஷாரப் அதிரடியாக மீண்டும் கைது செய்யப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்