முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமிதாப்பச்சனுக்கு 71-வது பிறந்த நாள்: மம்தா வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 11 அக்டோபர் 2013      சினிமா
Image Unavailable

 

கொல்கத்தா,அக்.12 - பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சனின் 71_வது பிறந்த தினத்தையொட்டி அவருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் பிரபலமாக உள்ள ஐஸ்வரராய்யின் மாமனாரும் பிரபல இந்தி திரைப்பட நடிகருமான அமிதாப்பச்சனின் 71_வது பிறந்த நாள் மும்பையில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. அவரது பிறநத தினத்தையொட்டி அவருக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்தும் புகழாரமும் சூட்டியுள்ளார். பிரபலமான அமிதாப்பச்சன் பிரபலம் என்ற வார்த்தைக்கு மறுவடிவம் கொடுத்தவர் என்று பார்ட்டியுள்ளார். தனது பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்துள்ள மம்தா மேலும் கூறியியிருப்பதாவது:_ இந்தி திரைப்படம் மூலம் பிரபலமான அமிதாப்பச்சனின் 71_வது பிறந்த தினத்தையொட்டி அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தி திரைப்படம் மூலம் அவர் பரபலமானாலும் இந்திய திரைப்படம் உலக அளவில் பிரபலமாக அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். அதனால் பிரபலமான அவர் பின்னர் பிரபலத்திற்கே மறுவடிவும் கொடுத்தவர். அவரது கடமை உணர்வும், சிறந்த குணங்களும் இந்திய குறிப்பாக இந்தி படங்கள் மீது உலக மக்கள் மயங்கும் அளவுக்கு சிறந்த நடிகர். அவரது இந்த 71_வது பிறந்த நாளையொட்டி அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் சந்தோஷமாகவும் அமைதியாகவும் இருக்கவும் அவர் தொடர்ந்து திரை உலகிற்கு பணியாற்றி உலக மக்களின் இதயங்களில் தொடர்ந்து இடம் பெற எல்லாம் வல்ல இறைவனை வாழ்த்துக்கிறேன். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்