முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாய்லின் புயல்: ஒரிசா மக்களுக்கு பட்நாயக் வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 11 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

புவனேஸ்வர்,அக்.12 - பாய்லின் புயல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று தனது மாநில மக்களை முதல்வர் நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டுள்ளார். புயலை சந்திக்க அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

வங்கக்கடலில் அந்தமான் பகுதிக்கு அருகே உருவான பாய்லின் புயல் வலுவடைந்து சூப்பர் புயலாக மாறி உள்ளது. இந்த புயலானது ஆந்திரா, ஒரிசா ஆகிய மாநிலங்களை இன்று காலையோ அல்லது மாலையோ கடுமையாக தாக்கலாம் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளார். சுமார் 80 கிலோ மீட்டர் வேகத்தில் கடலில் இருந்து காற்று வீசும் என்றும் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

இந்த நிலையில் பாய்லின் புயல் குறித்து மக்கள் எந்தவித அச்சமும் படவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநிலமானது அடிக்கடி இந்த மாதிரி புயல்களை சந்தித்து வருகிறது. அதனால் நமக்கு பழக்கப்பட்ட ஒன்றாக இருப்பதால் பாய்லின் புயலின் குறித்து எந்த கவலையும் படத்தேவையில்லை. முப்படை அதிகாரிகள், அதிரடிப்படையினர், அதி விரைவு மீட்ப்புடையினர், மத்திய படையினர், போலீசார் ஆகியோர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே மக்கள் தங்குவதற்கு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. உணவுப்பொருட்கள் உள்பட தேவையான அனைத்து அத்தியாவசியப்பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார். அதேசமயத்தில் கடத்தல், பதுக்கல், வியாபாரிகளுக்கும் முதல்வர் நவீன் பட்நாயக் கடுமையாக எச்சரித்துள்ளார். நிலைமையை சாதகமாக வைத்துக்கொண்டு பொருட்களை பதுக்கிவைத்துக்கொண்டு அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். இதற்கிடையில் புயலை சந்திக்க மும்படைகளும் தயார் நிலையில் வைத்திருப்பதாக ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணியும் கூறியுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்