முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்ககிரி தொகுதியில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தோல்வி

வெள்ளிக்கிழமை, 13 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சேலம் மே.14​- சங்ககிரி தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் 35 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க.வேட்பாளர் விஜயலட்சுமி பழனிசாமியிடம் தோல்வியடைந்தார்.நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி தொகுதியில் தி.மு.க.அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அ.தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி போட்டியிட்டார்.

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8.30 மணிக்கு சங்ககிரி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றில் இருந்தே அ.தி.மு.க.வேட்பாளர் விஜயலட்சுமி பழனிசாமி முன்னிலை பெற்று வந்தார்.19  சுற்றின் முடிவில் அ.தி.மு.க.வேட்பாளர் 1,05,502 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தி.மு.க.வேட்பாளர் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் 70,420 வாக்குகள் பெற்று இருந்தார். 35 ஆயிரத்து 82 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியை தழுவினார்.  சேலம் மாவட்டத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்ப அரசியல், சொத்து பறிப்பு, அரஜாகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் வீரபாண்டி ஆறுமுகத்தின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் ஆகும். இதே போல் தி.மு.க.அரசின் விலைவாசி உயர்வு, ஊழல், உள்ளிட்ட காரணங்களாலும் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் தி.மு.க.கூட்டணியினர் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 

சங்ககிரி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை விபரம் வருமாறு

பதிவான மொத்த வாக்குகள் -1,84,488

விஜயலட்சுமி பழனிசாமி(அ.தி.மு.க.)​ 1,05,505

வீரபாண்டி ஆறுமுகம்(தி.மு.க.)74,420

வாக்குகள் வித்தியாசம்-35,082

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago