முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி.தேர்தல்: 3-வது அணி அமைக்க இடதுசாரிகள் முயற்சி

வெள்ளிக்கிழமை, 11 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக். 12 - பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ், பா.ஜ.க தலைமையிலான கூட்டணிகள் தயாராகி வருகின்றன. இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாக 3 வது அணி அமைக்க சில மாநில கட்சிகள் முயற்சிகள் செய்தன. ஆனால் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் சமீபத்தில் பேட்டியளிக்கையில் மூன்றாவது அணி அமைக்க மாட்டோம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தனித்தனியாக நின்றால் பல இடங்களில் வெற்றி வாய்ப்பு கிட்டாமல் போகலாம் என்று கூறப்பட்டது. குறிப்பாக இடதுசாரி கட்சி தலைவர்கள் 3 வது அணி அமைத்தால் குறைந்தபட்சம் 100 இடங்களை கைப்பற்றலாம் என்று கருதுகிறார்கள். இடதுசாரிகள், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம், மக்கள் ஜனநாயக கட்சி, அ.தி.மு.க. ஆகியவை ஒருங்கிணையும் பட்சத்தில் 100 க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்ற முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று இடதுசாரி கட்சி தலைவர்கள் டெல்லியில் சமாஜ்வாடி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்கள். மதவாதத்திற்கு எதிராக ஒன்று திரள்வதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த மாத இறுதியில் மதவாத எதிர்ப்பு மாநாடு ஒன்றை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அந்த மாநாடு மூன்றாவது அணிக்கான அச்சாரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்