முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா வந்தது காமன்வெல்த் விளையாட்டு ஜோதி

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,அக். 13 - காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான ஜோதி டெல்லிக்கு வந்து சேர்ந்தது. காமன்வெல்த் நாடுகள் பங்கேற்கும் விளையாட்டு போட்டி 2014 ம் ஆண்டு ஜூலை 23 ம் தேதி முதல் ஆகஸ்ட் 3 ம் தேதி வரை பிரிட்டனில் நடைபெறவுள்ளது. காமன்வெல்த் விளையாட்டு ஜோதி போட்டியில் பங்கேற்கும் நாடுகளில் எடுத்து செல்லப்படுவது வழக்கம். இதையடுத்து காமன்வெல்த் விளையாட்டு ஜோதி டெல்லிக்கு வந்தது. ஜோதியை கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு அமைப்பு குழு துணை தலைவர் லூயிஸ் மார்ட்டினிடம் இருந்து இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர்(பொறுப்பு) விஜய்குமார் மல்ஹோத்ரா பெற்றுக் கொண்டார். இந்த ஜோடி நாடு முழுவதும் 2 நாள் சுற்றுப்பயணம் செய்யும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்