முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோலார் மோசடி வழக்கில் இருந்து உம்மன்சாண்டி விடுவிப்பு

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2013      ஊழல்
Image Unavailable

 

திருவனந்தபுரம், அக். 13 - கேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக பலரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்ததாக தொழில் அதிபர் பிஜூ ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதா நாயர், டெலிவிசன் நடிகை ஷாலுமேனன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

இந்த மோசடியில் கேரள முதல்வர் உம்மன்சாண்டிக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவரது உதவியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மோசடி கும்பலுக்கு துணை போனதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது தொடர்பாக நடந்த விசாரணையில் முதல்வர் உம்மன்சாண்டியின் உதவியாளர் டென்னி ஜோப்பன், பாதுகாவலர் சலீம்ராஜ் ஆகியோரும் கைதானார்கள். இதைடுத்து மோசடிக்கு பொறுப்பேற்று முதல்வர் உம்மன் சாண்டியும் பதவி விலக வேண்டும் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தினர். 

ஸ்ரீதரன்நாயர் என்பவர் கொச்சியில் உள்ள கேரள ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். முதல் மந்திரி அலுவலகத்திற்கு மோசடியில் கைதானவர்கள் அடிக்கடி சென்று வந்துள்ளனர். இதனை முதல் மந்திரி அலுவலக கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தால் தெரிந்து கொள்ளலாம் என்று புகாரில் கூறி இருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் இது தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி மாநில டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள அரசின் அட்வகேட் ஜெனரல் ஐகோர்ட்டில் அறிக்கை அளித்தார்.

அதில் சோலார் பேனல் மோசடி விவகாரம் தொடர்பாக முதல்மந்திரி உம்மன்சாண்டியிடம் விசாரணை நடத்தப்பட்டது என்றும், அதில் சோலார் பேனல் மோசடியில் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தெரியவந்ததாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும் முதல் மந்திரி அலுவலக கண்காணிப்பு கேமிராவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதானவர்கள் வந்து சென்றதற்கான ஆதாரங்கள் இல்லையென்றும் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து முதல்வர் உம்மன்சாண்டியை சோலார் பேனல் வழக்கு விசாரணையில் இருந்து விடுவிப்பதாக ஐகோர்ட் அறிவித்தது. புகார்தாரர் கூறிய படி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 9 ம் தேதி மோசடியில் தொடர்புடையவர்கள் முதல் மந்திரி அலுவலகத்திற்கு சென்றார்கள் என்பதற்கான எந்த ஆதாரமும் கண்காணிப்பு கேமிரா மூலம் தெளிவுபடுத்தப்படவில்லை. எனவே இந்த வழக்கு விசாரணையில் இருந்து முதல் மந்திரி உம்மன் சாண்டி விடுவிக்கப்படுகிறார் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago