முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிரட்டலால் ஈபிள் கோபுரம் மூடல்: பயணிகள் வெளியேற்றம்

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

பாரீஸ், அக். 15 - பிரான்சில் டெலிபோன் மிரட்டலால் ஈபிள் கோபுரம் மூடப்பட்டது. அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டனர். 

பிரான்சு தலைநகர் பாரீசில் ஈபிள் டவர் உள்ளது. இது 324 மீட்டர் உயரமுள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான இது சுற்றுலா தலமாக திகழ்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் இதனை பார்த்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த 9 ம் தேதி இங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டெலிபோன் மிரட்டல் வந்தது. இதனால் அங்கு பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. உடனே ஈபிள் கோபுரத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர் கோபுரம் 2 மணி நேரம் மூடப்பட்டிருந்தது. அங்கு வெடிகுண்டு சோதனை நடத்திய போது அது வெறும் புரளி என தெரியவந்தது. பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்