லிபியா கலவரத்தில் 2 ஆயிரம் பேர் பலி

டிரிபோலி, பிப்.24 - லிபியா கலவரத்தில் இதுவரை 2000க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாயினர். லிபியாவில் அதிபர் கடாபி பதவி விலக வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு அடக்கும் படி ராணுவத்திற்கும், போலீசுக்கும் கடாபி கடுமையாக உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது ராணுவமும் போலீசும் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. பென்காசி, டிரிபோலி ஆகிய நகரங்களில் துப்பாக்கிச்சூடு நடந்தது. ஹெலிகாப்டரில் பறந்தபடி குண்டுகள் வீசப்பட்டன. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதுவரை 233 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாவு எண்ணிக்கை 2ஆயிரத்தையும் தாண்டி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே அதிபர் கடாபி தப்பிஓடி விட்டதாக முதலில் செய்தி வெளியானது. இதையடுத்து டெலிவிஷனில் தோன்றிய கடாபி நாட்டை விட்டு ஓடவில்லை. லிபியாவில் தாந் இருப்பேன். சிலர் வதந்தியை பரப்புகிறார்கள். இதனை நம்ப வேண்டாம். எனக்கு எதிரான போராட்டத்தை கைவிடடவேண்டும். இல்லாவிட்டால் லிபியா தெருக்களில் பிணக்குவியலில் ஆன மலைகளைத்தான் மக்கள் பார்க்க நேரிடும். நானும் நாட்டுக்காக உயிர் துறக்கும் தியாகியாக இருப்பேனே தவிர பதவி விலகவோ பயந்து நாட்டை விட்டு ஓடவோ என்றார் கடாபி.