முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெய்ப்பூரில் இன்று 2-வது போட்டி: இந்தியா பதிலடி கொடுக்குமா?

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

ஜெய்ப்பூர், அக்.16 - ஜெய்ப்பூரில் இன்று 2_வது போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு,  இந்தியா பதிலடிகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெய்லி தலைமையில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.

இரு அணிகள் இடையேயான ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 7 ஒருநாள் போட்டித் தொடரில் புனேயில் நடந்த முதல் போட்டியில் 72 ரன்னில் இந்தியா மோசமான தோல்வியைத் தழுவியது. இந்தியா_ஆஸ்திரேலியா மோதும் 2_வது ஒருநாள் போட்டி ஜெய்ப்பூரில் இன்று நடைபெறுகிறது.

முதல் போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு இந்திய அணி இன்று பதிலடி கொடுக்கும் என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் இந்திய. அணியின் பேட்டிங்கும், பந்துவீச்சும் ஏமாற்றம் அளித்தது. மிகப்பெரி.ய ஸ்கோரை எடுக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறினர். அனைவரும் ஒருங்கிணைந்து ஆட வேண்டிய நிலையில் உள்ளனர்.

2015 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு ரெய்னாவை 4_வது வீரராக கேப்டன் டோனி களம் இறக்கி வருகிறார். யுவராஜ் சிங்குக்கு முன்பாக அவர் களம் இறக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் டோனி இதே நிலையை கடை பிடிப்பார் என்று தெரிகிறது. தொடக்க வீரர் ஷிவான் தவான் தனது ஆட்டத் திறமையை மேம்படுத்த வேண்டிய நிலையில் உள்ளார். இஷாந்த் சர்மாவின் பந்து வீச்சு மிகவும் மோசமாக அமைந்தது. சிறப்பாக ஆட வேண்டிய நிலையில் அவர் உள்ளார். 

முதல் ஆட்டத்தில் வென்ற நம்பிக்கையுடன் 2_வது போட்டியிலும், வெல்லும் ஆர்வத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. தொடக்க ஆட்டக்கா"ர்கள் ஆரோன் பிஞ்ச், ஹியூக்ஸ் சிறந்த அதிரடி வீரர்கள் ஆவார்கள். வாட்சன், கேப்டன் பெய்லி, மேக்ஸ் வெல் ஆகியோர் சிறந்த பேட்ஸ்மேன்களும், ஜான்சன் பவல்னெர் மெக்காய் போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர்.  ஜெய்ப்பூர் மான்சிங் மைதானத்தில் இரு அணிகளும் ஒரு போட்டியில் மோதின. 1986_ம் ஆண்டு நடந்த அந்த போட்டியில் இந்தியா 7 விக்கெட்டில் வெற்றிபெற்றது.

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்