முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அல்லா வார்த்தையை முஸ்லீம் மட்டுமே பயன்படுத்த தீர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

கோலாலம்பூர், அக். 16 - மலேசியாவில் அல்லா என்ற வார்த்தையை முஸ்லீம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 

மலைசியாவில் இருந்து வெளிவரும் கிறிஸ்தவ பத்திரிகை ஒன்று கடவுளை குறிக்க அல்லா என்ற வார்த்தை பயன்படுத்தியது. இதற்கு கடந்த 2009 ம் ஆண்டு தடை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து அப்பத்திரிகை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த கோர்ட் அல்லா என்ற வார்த்தையை அப்பத்திரிகை பயன்படுத்தலாம் என்று தீர்ப்பளித்தது. 

அதை தொடர்ந்து மலேசியாவில் வன்முறை வெடித்தது. மசூதிகளும் கிறிஸ்தவ தேவாலயங்களும் தாக்கப்பட்டன. மலேசியா முஸ்லீம் நாடு என்பதால் அரசு இந்த தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த தலைமை நீதிபதி முகமது அபன்டி அலி தீர்ப்பளித்தார். அதில் முஸ்லீம் அல்லாதவர்கள் கடவுளை குறிக்க அல்லா என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது என தீர்ப்பளித்தார். 

பொதுவாக கிறிஸ்தவ மதத்தில் அல்லா என்ற வார்த்தையை பயன்படுத்துவது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தீர்ப்பு தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கிறிஸ்தவ பத்திரிகை தெரிவித்துள்ளது. எனவே இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதாக பத்திரிகை ஆசிரியர் லாரன்ஸ் ஆண்ட்ரூ தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்