முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க கப்பலில் நீச்சல் குளத்தில் குளித்த சிறுவன் சாவு

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

மியாமி, அக்.16 - அமெரிக்க கப்பலில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்த ஒரு சிறுவன் இறந்தான்.  அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் ஆண்டு தோறும் கேளிக்கை விழாக்கள் நடைபெற்று வருகின்றன. 

அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து ஒரு  கப்பல் புறப்பட்டுச் சென்றது. இதில் 3000 பேர் பயணம் செய்தனர். இந்த கப்பலில் ஊழியர்கள் 1100பேர் இருந்தனர். மியாமிக்கு  இந்த கப்பல் வந்தது. இந்த கப்பலில் உள்ள நீச்சல் குளத்தில் ஒரு சிறுவன் தனது அண்ணனுடன் நீந்தி குளித்துக்கொண்டிருந்தான். ஆழமான பகுதிக்கு சென்ற சிறுவன் தத்தளித்தான். அவனை காப்பற்றுவதற்குள் நீரில் மூழ்கி அந்த சிறுவன் இறந்தான். இதுபற்றி மியாமி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 இதுபற்றி கப்பல் கம்பெனி நிர்வாகம் கூறுகையில் சிறுவர்களை பெற்றோர் தான் பாதுகாக்க வேண்டும் என்று விதி முறை உள்ளது என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்