முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்காசியில் நடிகர் சரத்குமார் வெற்றி

சனிக்கிழமை, 14 மே 2011      சினிமா
Image Unavailable

 

தென்காசி. மே. 14 - தென்காசி சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் திரைப்பட நடிகர் சரத்குமார் 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தென்காசி சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளராக சமத்துவ மக்கள் கட்சி சார்பில் திரைப்பட நடிகர் சரத்குமாரும், திமுக சார்பில் வீ.கருப்பசாமி பாண்டியன் பா.ஜ.க சார்பில் வி.அன்புராஜ் உட்பட 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் சரத்குமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் வீ.கருப்பசாமி பாண்டியனை விட 22,967 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தென்காசி தொகுதி வாக்குகள் விபரம்

 சரத்குமார்( சமக) - 92,253, கருப்பசாமி பாண்டியன்( திமுக) - 69,286,  வி.அன்புராஜ் 

(பா.ஜ.க) 2698, எஸ்.ஆறுமுகம் (சுயே) 1507, டி.மாரியப்பன் (சுயே) 1140, வேதாள அய்யன்கன்(சுயே) 1080, எஸ்.பரமசிவன்(சுயே) 954, வி.கண்ணன்(சுயே) 501, ஜி.ராமநாதன் (சுயே) 491, வாக்குகள் பெற்றுள்ளார்கள். மேலும் தென்காசி தொகுதியில்  மொத்தம் 1010 தபால் ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இதில் திமுக வேட்பாளர் வீ.கருப்பசாமி பாண்டியன்(திமுக) 664 வாக்குகளும், சரத்குமார்(சமக) 82 வாக்குகளும், எஸ்.வி.அன்புராஜ்(பா.ஜ.க) 8 வாக்குகளும், வி.கண்ணன்(சுயே) 1 வாக்கும் பெற்று இருந்தனர். தென்காசி தொகுதி வாக்குகள் 18 ரவுண்டுகள் எண்ணப்பட்டது. இதில் ஆரம்பம் முதலே சமக வேட்பாளர் சரத்குமார் முன்னணியில் இருந்து வந்தார். முடிவில் 18 வது ரவுண்டில் சமக வேட்பாளர் சரத்குமார் 22, 967 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சரத்குமார் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தென்காசி சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி காங்கேயன்கென்னடி சரத்குமாரிடம் வழங்கினார்.

அதன்பின் நிருபர்களிடம் பேசியத சரத்குமார்:-  தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியை அதிமுக கூட்டணியில் சேர்த்து 2 இடங்களில் போட்டியிட வாய்ப்பளித்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு முதலில் நன்ற தெரிவித்து கொள்கிறேன். தென்காசி தொகுதியில் என்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்கள், எனது வெற்றிக்கு அயராது பாடுபட்ட அதிமுக தொண்டர்கள், சமக 

தொண்டர்கள், மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள், மற்றும் நிர்வாகிகள், என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாக்களித்த வாக்காள பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன். இன்றைக்கு தமிழகத்து மக்கள் நல்ல தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை என்பதை உணர்ந்து வாக்களித்துள்ளார்கள். தமிழகத்திற்கு நல்ல விடியல் கிடைத்துள்ளது. தேர்தலில் நான் மக்களிடம் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற அயராது பாடுபடுவேன். 

தமிழகத்தில் புரட்சித்தலைவி தலைமையில் நல்லாட்சி நடைபெற எனது வாழ்த்துக்

களை தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு அவர் பேசினார்.

அதன்பின் குற்றாலம் பேரறிஞர் அண்ணா, நன்னகரம் டாக்டர் அம்பேத்கர், தென்காசி பசும்பொன் தேவர், பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் சிலைகளுக்கு மலர் மாலைகள் அணித்து வணங்கினார். இந்த நிகழ்ச்சியில் நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ராஜா செந்தூர்பாண்டியன், சமக பொதுச்செயலாளர் கருநாகராஜன், சமக அமைப்பு செயலாளர் காளிதாஸ், சமக மாவட்ட செயலாளர் தங்கராஜ், அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் வி.பி.மூர்த்தி, மாவட்ட பொருளாளர் கே.சண்முகசுந்தரம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மாடசாமி பாண்டியன், பொய்கை மாரியப்பன், தென்காசி ஒன்றிய செயலாளர் சங்கரபாண்டியன், நகர செயலாளர் முத்துக்குமார், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ஆய்க்குடி செல்லப்பன், செங்கோட்டை நகர செயலாளர் தங்கவேலு, கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டியன், அதிமுக வழக்கறிஞர்கள், குற்றாலம் கே.பி.குமார் பாண்டியன், சின்னராஜ் பாண்டியன், ஆ.வெங்கடேஷ், நன்னை மு.பாலசுப்பிரமணியன், ஆதிபாலசுப்பிரமணியன், அதிமுக மின்வாரிய கோட்ட செயலாளர் கே.பி.எம்.துரை, சுரண்டை எஸ்.வி.கணேசன், மற்றும் சமக நிர்வாகிகள், மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்