முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதுகாப்பு நிலைமை நவாஸ் ஷெரீப் ஆலோசனை

புதன்கிழமை, 16 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், அக். 17 - பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை குறித்த ஆலோசனை கூட்டம் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையில் நடந்தது. 

இக்கூட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ தலைமை அதிகாரி அஷபக் பர்வேஸ் கயானி, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் ஸாஹிருல் இஸ்லாம், உள்துறை அமைச்சர் சவுத்ரி நிஸார் அலிகான், தேசிய பாதுகாப்பு குறித்த பிரதமரின் ஆலோசகர் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் ஸர்தாஜ் அஸிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பாகிஸ்தானின் பாதுகாப்பு குறித்த நிலை மற்றும் வரும் 23 ம் தேதி நவாஸ் ஷெரீப் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திப்பது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

தீவிரவாதிகளுடனான அமைதி பேச்சுவார்த்தை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தடை செய்யப்பட்ட இயக்கமான தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹகி முல்லாஹ் முகது, ஜியோ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாகிஸ்தான் அரசோ, தாங்களோ முன் நிபந்தனைகள் ஏதும் வைக்கவில்லை என்று தெரிவித்தார். பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரத்தில் போலீஸ் வாகனத்தின் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 5 காவலர்கள், 3 குழந்தைகள் உட்பட 11 பேர் காயமடைந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்