முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி தேர்தல்: கெஜ்ரிவால் கட்சிக்கு 18 இடங்கள் கிடைக்கும்

புதன்கிழமை, 16 அக்டோபர் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, அக். 17 - 70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. 

சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் பா.ஜ.க.வின் வெற்றியை சற்று பாதிக்கும் வகையில் கெஜ்ரிவாலின் கட்சிக்கு ஆதரவு அதிகரித்து இருப்பது சமீபத்தில் நடந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. 

கெஜ்ரிவால் கட்சியின் வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. கெஜ்ரிவால் கட்சிக்கு 18 இடங்களில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பு முடிவில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்தலில் கெஜ்ரிவால் கட்சி 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லியில் செல்வாக்கு அதிகரித்துள்ள போதிலும் பாரதீய ஜனதா கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக 28 முதல் 30 இடங்கள் பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சிக்கு 20 இடங்களே கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. பா.ஜக. ஆட்சி அமைக்க முடியாமல் போகும் பட்சத்தில் தொங்கு சட்டசபையே ஏற்படும் என்று தெரிகிறது. சிறந்த முதல்வராக யாரை கருதுகிறீர்கள் என்று கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு 32 சதவீதம் பேர் கெஜ்ரிவாலை கூறியுள்ளனர். தலா 27 சதவீதம் பேர் காங்கிரசின் ஷீலாதீட்சித்தையும், பா.ஜ.க.வின் விஜய்கோயலையும் குறிப்பிட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்