முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடுமைப் படுத்துவதா? முன்னாள் மூத்த அதிகாரி ஆவேசம்

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, அக். 18 - நிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரத்தில் நேர்மையான அதிகாரிகளை கொடுமைப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்று முன்னாள் மூத்த அதிகாரிகள் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். 

நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தியது ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றால் ரூ. 1.86 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தியது நிலக்கரி சுரங்க ஊழல். இந்த ஊழல் விவகாரத்தில் பிரதமர் உள்ளிட்ட பலர் மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்த விவகாரம் தொடர்பாக ஆதித்யா பிர்லா குழும தலைவர் பிர்லா மீதும் முன்னாள் நிலக்கரி துறை செயலாளர் பி.சி. பரேக் ஆகியோர் மீதும் சி.பி.ஐ. எனப்படும் மத்திய புலனாய்வு துறை வழக்கு பதிவு செய்தது. மேலும் ஹிண்டால்கோ நிறுவனம் உள்ளிட்ட பல இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனையும் நடத்தியது. இதனிடையே குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முன்னாள் நிலக்கரி துறை செயலாளர் பி.சி. பரேக் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது பிரதமர் மீதும் குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்று கூறிய அவர், ஒருவேளை சதி நடந்திருந்தால் அதில் முதல் சதியாளர் பிர்லா, 2 வது சதியாளராக நான் இருக்கலாம். அதே நேரம் இந்த விஷயத்தில் முடிவெடுத்த பிரதமர்தான் 3 வது சதியாளர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். ஆக இந்த வழக்கில் பிரதமரையும் ஒரு சதியாளராக சேர்த்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் பரேக். என்னுடைய பரிந்துரைகளை ஆய்வு செய்த பிரதமர் மன்மோகன்சிங் அதன் பிறகு ஒரு முடிவெடுத்துள்ளார். ஆகவே அவருக்கும் இதில் சம்பந்தமுண்டு என்பதைப் போல் பி.சி. பரேக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த விஷயத்தில் முடிவெடுத்தது பிரதமர் தான். ஆகவே அவரும் ஒரு குற்றவாளி என்றும் பி.சி. பரேக் குற்றம் சாட்டினார். அவரது இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கலந்து காணப்படுகிறது.

நிலக்கரி துறையின் முன்னாள் மூத்த அதிகாரிகள் பரேக்கின் கருத்துக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர். குறிப்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், முன்னாள் நிலக்கரி துறை செயலாளருமான இ.ஏ.எஸ். ஷர்மா இது தொடர்பாக கூறியதாவது, 

நேர்மையான அதிகாரிகளை எல்லாம் கொடுமைப்படுத்த தொடங்கினால் பிறகு அரசின் நம்பகத்தன்மையே போய் விடும். என்னைப் பொறுத்தவரை பி.சி. பரேக் ஒரு நேர்மையான அதிகாரி. தகுதியுள்ள அதிகாரியும் கூட. ஆனால் அவர் மீது மட்டும் ஏன் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்கள் என்பதுதான் எனக்கு புரியவில்லை. பிரதமர் அலுவலகத்தில் உள்ள எவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அதே போல் எந்த ஒரு அமைச்சர் மீதும் வழக்குப் பதிவாகவில்லை. சதி என்று வந்து விட்டால் அதில் எல்லோரையும்தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சதிக்கு சம்பந்தம் இல்லாதவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. ஒரு விசாரணை என்பது குறிக்கோளுடன் நடத்தப்பட வேண்டும். அதில் நெருக்கடிக்கு இடம் தரக்கூடாது. ஆனால் நேர்மையில்லாத மந்திரிகள், நேர்மையில்லாத அரசியல் தலைவர்கள், அதிகாரிகளை எல்லாம் விட்டு விட்டு நேர்மையான அதிகாரியை கொடுமைப்படுத்துவது என்பது உண்மையிலேயே துரதிஷ்டவசமான ஒன்று. எனவே பிரதமர் அலுவலகத்தின் பங்கு பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். இது தொடர்பாக சி.வி.சி. க்கு கடிதம் எழுதியிருக்கிறேன். இவ்வாறு இ.ஏ.எஸ். ஷர்மா கூறியுள்ளார். இதே போல் வேறு சில மூத்த அதிகாரிகளும் பரேக்கிற்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago