ஐகோர்ட் நரேந்திர மோடி நிகழ்ச்சிக்கு தடைகோரிய மனு தள்ளுபடி

Image Unavailable

 

சென்னை, அக்.19 - தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் தங்க தமிழ் வேளன் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் நரேந்திரமோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடத்த வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய சென்னை போலீஸ் கமிஷனருக்கும், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் உத்தரவிட வேண்டும். என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மதிவாணன், கே.பி.கே. வாசுகி ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. நரேந்திரமோடி நிகழ்ச்சி சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெறும் போது எந்த கலவரமும் ஏற்படாமல் சென்னை போலீசார் பார்த்து கொள்ள வேண்டும். எனவே மனுவை தள்ளுபடி செய்கிறேன்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ