முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி ஒதுக்கீடு: பட்நாயக்கிடம் விசாரிக்க சி.பி.ஐ. முடிவு

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2013      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, அக். 19 - மத்திய அரசு நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததில் ரூ. ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை துறை குற்றம் சாட்டியது. இது தொடர்பாக பிரபல தொழிலதிபர் பிர்லா மீதும் நிலக்கரி துறை முன்னாள் செயலாளர் பரேக் உள்ளிட்ட சிலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆதித்யா பிர்லா குரூப் நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்ய ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் சிபாரிசு செய்துள்ள விபரம் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கடந்த 2005 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ம் தேதி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதினார். அதில் ஹிண்டால்கோ நிறுவனத்தின் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு கோரிக்கையை பரிசீலிக்குமாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து அப்போதைய நிலக்கரி துறை செயலாளர் பரேக் ஒதுக்கீடு கமிட்டி பரிந்துரையை மாற்றி ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்துள்ளார். இதையடுத்து நவீன் பட்நாயக்கிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே போல் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹிண்டால்கோ நிறுவன தலைவர் குமாரமங்கலம் பிர்லாவுக்கும், நிலக்கரி துறை முன்னாள் செயலாளர் பரேக்கிற்கும் சம்மன் அனுப்ப சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே இது தொடர்பாக நவீன் பட்நாயக் விளக்கமளித்துள்ளார். புவனேசுவரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், மாநில நலன் கருதியே ஹிண்டால்கோ நிறுவனத்தின் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு கோரிக்கையை பரிசீலிக்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதினேன். ஆனால் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டுக்கான நடைமுறைப்படி இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது. இதில் என் பங்கு ஏதும் இல்லை என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்