முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி ஒதுக்கீடு: பிரதமரை விட முடியாது: ஜெட்லி

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2013      ஊழல்
Image Unavailable

 

நியூயார்க், அக். 20 - சர்ச்சைக்குரிய நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக சி.பி.ஐ. மேற்கொண்டு வரும் விசாரணையில் இருந்து பிரதமர் மன்மோகன்சிங்கை மட்டும் ஒதுக்கி விட முடியாது. அமைச்சகத்தின் முறையான அதிகாரம் பெற்று இருந்தவர் என்பதால் அவர் இதற்கு பொறுப்பேற்கத்தான் வேண்டும் என்று பா.ஜக. தலைவர் அருண்ஜெட்லி கூறியுள்ளார். 

தொழிலதிபர் பிர்லா, முன்னாள் நிலக்கரி துறை செயலாளர் பி.சி. பரேக் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளதன் மூலம் முதலீட்டாளர்களும் அரசு அதிகாரிகள் மட்டுமே முறைகேடுகள் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். பொறுப்பில் உள்ளவர்கள் சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்படுவர் என்ற ஓர் தவறான சமிக்ஞை அனுப்பப்பட்டுள்ளது என்றார் ஜெட்லி. பரேக் பரிந்துரை செய்யும் அதிகாரம் மட்டுமே படைத்தவர். ஆனால் அதை அமல்படுத்தும் அதிகாரம் படைத்த அமைச்சர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டே ஆக வேண்டும் என்றார் ஜெட்லி. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்