முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி சுரங்க ஊழல்: மம்தாவிடம் விசாரிக்க நடவடிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, அக். 20 - நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடுகள் காரணமாக மத்திய அரசுக்கு ரூ. 1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த முறைகேட்டில் பிரதமர் மன்மோகன்சிங் முதல் பல அரசியல் தலைவர்களின் பெயர்களும் அடிபட தொடங்கியுள்ளது. ஒடிசாவில் ஹிண்டால்கோ என்ற தனியார் நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்கீடு செய்ய கோரி அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கடிதம் எழுதியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சத்தீஸ்கர் முதல்வர் ராமன்சிங் ஆகியோர் தங்கள் மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து நிலக்கரி சுரங்கங்களை பெற்றுள்ளனர். இதுவரை சுமார் 70 நிலக்கரி சுரங்கங்களை மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் ஒதுக்கீடு செய்து கொண்டன. இதற்கான ஒப்பந்தங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து தற்போது சி.பி.ஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையின் ஒரு பகுதியாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சத்தீஸ்கர் முதல்வர் ராமன்சிங் இருவரையும் விசாரிக்க சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்துள்ளது. அது போல ஜார்கண்ட் முன்னாள் முதல்வர்கள் மதுகோடா, அர்ஜூன் முண்டா ஆகியோரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரவுள்ளனர். மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியாவிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டுக்கு அரசியல்வாதிகள் முறைகேடாக பரிந்துரை செய்தார்களா என்பது தெரியவரும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்