முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெல்ஜியத்தில் விமானம் நொறுங்கி விழுந்ததில் 11 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

புருசெல்ஸ். அக்.21 - பெல்ஜியத்தில் பாராசூட் வீரர்கள் சென்ற விமானம் நொறுங்கி  விழுந்ததில் 11 பேர் பலியானார்கள். பெல்ஜியத்தின் தென் மேற்குப் பகுதியில் உள்ள நமூர் நகரில் இருந்து குட்டி சுற்றுலா விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் பாராசூட்டிலிருந்து தரையில் குதிக்கும் 11 வீரர்கள் பயணம் செய்தனர்.   

விண்ணில் இருந்து சாகசம் செய்வதற்காக அந்த விமானத்தில் அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். விமானம் புறப்பட்ட 20 நிமிடத்தில் நடுவானில் திடீரென பழுதடைந்தது. பின்னர் தரையில் விழுந்து நொறுங்கியது.  இதனால் விமானம் தீபிடித்து எரிந்தது. அதில் பயணம் செய்த 11 வீரர்களும் இறந்தனர். நடுவானில் பறந்தபோது விமானத்தின் இறக்கையில் சேதம் ஏற்பட்டது. இதனால் நிலை தடுமாறி நமூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள மார்சோவெலட் என்ற கிராமத்தில் விமானம் நொறுங்கி விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.     

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்