பாக். பிரதமர் ஷெரீப் கோரிக்கையை நிராகரித்தார் ஷிண்டே

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,அக்.22 - ஜம்மு_காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாணுவதில் அமெரிக்காவின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு இந்திய உள்துறை அமைச்சர் சஷில் குமார் ஷிண்டே பதில் அளித்துள்ளார். 

பாகிஸ்தான் புதிய பிரதமர் நவாஸ் ஷெரீப் நாளை வாஷிங்டன்னில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை நாளை சந்தித்து பேசுகிறார். இதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா செல்லும் வழியில் லண்டன் விமான நிலையத்தில் ஷெரீப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் இந்தியா_பாகிஸ்தான் இடையே உள்ள காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரு வல்லரசு நாடு (அமெரிக்கா) தலையிட வேண்டும் என்று கூறினார். இதை இந்தியா அடியோடு நிராகரித்துள்ளது. புதுடெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் காஷ்மீர் பிரச்சினையானது இந்தியா_பாகிஸ்தானுக்கும் இடையேயானது. இதில் 3_வது நாடு தலையிட இந்தியா ஒருபோதும் சம்மதிக்காது. காஷ்மீர் பிரச்சினையை இருநாடுகளும்தான் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலை தெளிவாக இருக்கிறது.  மறைந்த இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு கடைப்பிடித்த கொள்கைதான் இப்போதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. காஷ்மீர் பிரச்சினையில் 3_வது நாடு தலையிட அனுமதிக்கமாட்டோம் என்று நேரு கூறினார். அதைத்தான் தற்போதும் இந்தியா தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது என்று ஷிண்டே தெரிவித்தார். இன்று காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகில் உள்ள ஜம்பை பகுதிக்கு செல்கிறேன். இங்கு நிலவும் சூழ்நிலை குறித்து ஆய்வு செய்வேன் என்றும் ஷிண்டே மேலும் கூறினார்.   

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: