முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் வழக்கில் தண்டனை: காங்., எம்.பி. பதவி இழந்தார்

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,அக்.22 - ஊழல் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் தண்டனை பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்யசபை எம்.பி. ரஷீத் மசூத் பதவியை இழந்தார். தண்டனை பெற்று எம்.பி.பதவியை முதல் முதலாக இழந்தவர் மசூத்துதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 1990_91_ம் ஆண்டில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் ரஷீத் மசூத். அப்போது மார்க் குறைவாக எடுத்த திரிபுரா மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடம் வாங்கிக்கொடுத்தது மற்றும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ரஷீத் மசூத் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு டெல்லி சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிவில் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் ரஷீத் மசூத்துக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நீதிபதி மாலிக் விதித்தார். தண்டனை எதிர்த்து அவர் அப்பீல் செய்திருந்தார். அதனால் அவர், ராஜ்யசபை எம்.பி. பதவியை இழக்காமல் இருந்தார். இதற்கிடையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டிருப்பதை சுப்ரீம்கோர்ட்டு ரத்து செய்துவிட்டது. இரண்டாண்டுகளுக்கு மேலாக தண்டனை பெற்றிருந்தால் மேல் கோர்ட்டில் அப்பீல் செய்திருந்தாலும் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. பதவியை இழந்தவராக கருதப்படும் என்று சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தண்டனை பெற்ற எம்.பி.யோ அல்லது எம்.எல்.ஏ.வோ மேல்கோர்ட்டில் அப்பீல் செய்திருந்தால் அவர்கள் பதவி இழக்க தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதை சுப்ரீம்கோர்ட்டு ரத்து செய்து இந்த தீர்ப்பை அளித்துள்ளது. இதனையொட்டி ரஷீத் தனது ராஜ்யசபை உறுப்பினர் பதவியை இழந்துவிட்டார். தண்டனை பெற்ற ஒரு எம்.பி. பதவியை இழந்த முதல் எம்.பி. ரஷீத்துதான். இவர் காங்கிரஸ் கட்சி சார்பார ராஜ்யசபை எம்.பி.யாக இருந்தார். ரஷீத் எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை தேர்தல் கமிஷனுக்கு ராஜ்யசபை செயலகம் நோட்டீஸ் மூலம் தெரிவித்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்த நோட்டீசில் ரஷீத் எம்.பி. பதவியை பறிக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கால்நடை தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ஜெகதீஷ் சர்மா ஆகியோரும் தலா ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளனர். இவர்களும் இன்னும் ஒரு சில நாட்களில் எம்.பி. பதவி இழக்க நேரிடும் என்று தெரிகிறது. அதேசமயத்தில் இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுப்பதை லோக்சபை செயலகம் காலம் தாழ்த்தி வருவதாக தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்