ஈராக்கில் வெடிகுண்டு தாக்குதல்: 50 பேர் பலி

பாக்தாத், அக்.,22 - பாக்தாத்தில் நடைபெற்ற இரட்டை வெடிகுண்டுதாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். இங்கு தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாக்தாத்தின் தெற்குப் பகுதியில் அல் அமீரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் சாலையோரத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்தும், காபி ஷாப்பில் தற்கொலைப் படை வெடிகுண்டு தாக்குதலும் நடத்தினர். இதில் போலீஸாரின் ரோந்து வாகனம் வெடித்துச் சிதறியது.
காபி ஷாப்பில் நடைபெற்ற தாக்குதலில் போலீஸார் உள்பட 35 பேர் இறந்தனர், சிரியா எல்லையில் ரவா என்ற இடத்தில் நடந்த தாக்குதலில் 10 பேர் இறந்தனர். தீவிரவாதிகள் உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு தாக்குதல் நடத்தினர். ஒருவர் பைக்கில் வந்து தாக்குத.ல் நடசத்தினார் இதில் 5 பேர் இறந்தனர்., இதனால் ஈராக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.