முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். பிரதமர் நவாஸ் இன்று ஒபாமாவை சந்தித்து பேசுகிறார்

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,அக்.23 - அமெரிக்கா சென்றுள்ள பாக்.பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசுகிறார். 

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அங்கு நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தையில் தீவிரவாத பிரச்சனைக்கும் பொருளாதாரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதலாவதாக வாஷிங்டனில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அலுவலகத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியை நவாஸ் ஷெரீப் சந்தித்து பேசினார்.  அதுமட்டுமின்றி பாதுகாப்புத்துறை, எரிசக்தித்துறை, நிதித்துறை அமைச்சர்களையும் நவாஸ் சந்திக்கவுள்ளார். இது குறித்து அமெரிக்க அதிகாரி கூறுகையில் பிரதமர் நவாஸ் ஷெரீபின் வருகை சரித்தர முக்கியத்துவம் வாய்ந்தது. சமீப காலமாக அமெரிக்கா_பாகிஸ்தானிடையேயான உறவு பலமடைந்து வருகிறது. மக்கள் நலனை மையமாகக் கொண்ட இந்த நட்புறவு வளர்ச்சிப்பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. அவரது சுற்றுப்பயணம் நிறைவுறும்போது அமெரிக்காவின் அனைத்துத்துறை உயர் அதிகாரிகளுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பார். குறிப்பாக அவருடனான பேச்சுவார்த்தையில் பயங்கரவாதம் மற்றும் பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார். 

மற்றொரு அதிகாரி கூறுகையில் பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்தி பேச்சுவார்த்தை நடைபெறும். தீவிரவாதம் குறித்து இருநாடுகளின் பார்வையும் வேறுபட்டு இருந்தாலும் சமீபத்தில் பாகிஸ்தானிய தலிபான்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள நவாஸ் ஷெரீபின் கருத்துக்களை தெரிந்து கொள்ள அமெரிக்கா ஆர்வமாக உள்ளது என்றார். 

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான்கெரியை சந்திக்க வந்திருந்த நவாசை கெர்ரி வரவேற்று பேசுகையில் பாகிஸ்தானுடனான நட்புறவு எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். அந்நாட்டுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்த நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறோம். ஜனநாயகப்பாதையில் திரும்பியுள்ள நிலையில் பொருளாதார வீழ்ச்சியாலும், பயங்கரவாதத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடு என்பதால் அந்நாட்டு  பிரதமரை  வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று கெர்ரி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்