முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புற்று நோய்க்கு புதிய மருந்து: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

மெல்போர்ன்,அக்.23 - புதிய புற்றுநோய் தடுப்பு மருந்தை மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கான மருத்துவ பரிசோதனை அமரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனைகளில் நடந்து வருகிறது. 

உலகம் முழுவதும் பலவிதமான புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மனிதனின் உடலில் இருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல்லில் இருந்து புற்று நோய்க்கான மருந்து இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இம்மருந்தில் பக்கவிளைவுகள் அதிகம் இல்லை என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். புற்றுநோயை எளிதாக தீர்க்க கூடிய இம்மருந்து குறித்த மருத்து பரிசோதனை அமெரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் நடந்து வருகிறது. இம் மருந்தை புற்றுநோயாளிகளுக்கு டாக்டர்கள் கொடுத்து மருந்து எஏந்த அளவுக்கு செயல்படுகிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். 

மனிதனின் வெள்ளை அணுக்கள் குறைபாடு காரணமாக ஏற்படும் புற்று நோயை குணப்படுத்த முடியாத நிலை இருந்தது. இந்த நோயை புதிய மருந்து மூலம் குணப்படுத் முடியும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

கே.பி. 004 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தின் முதல் கட்ட பரிசோதனை ஊக்கமளிப்பதாக இருந்ததாகவும், மருந்தை அதிக அளவில் நோயாளிகளுக்கு கொடுத்தாலும் எந்தவித பாதிப்பையும் அது ஏற்படுத்த வில்லை என்றும் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்