முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடாளுமன்ற விவாத நேரத்தை அதிகரிக்க அறிவுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

ஷில்லாங், அக்.23 - நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் விவாத நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றம், சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் அதிக நாள்களுக்கு நீடிக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார். ஷில்லாங்கில், மேகாலயா மாநில சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

நாடாளுமன்றம், சட்டப்பேரவையின் கூட்டத் தொடர்களை அடிக்கடி நடத்துவதற்கும், தொடர்ச்சியாக 26 வாரங்கள் நடத்துவதற்கும் தடை எதுவும் இல்லை. ஆனால் பல்வேறு மாநில பேரவைகளும், ஓராண்டு முழுவதற்குமே வெறும் 6 மாதங்கள் மட்டுமே கூடுகின்றன. இரண்டு, மூன்று கூட்டத் தொடர்களாக அவை பிரித்து நடத்தப்படுகின்றன. 

ஒரு கூட்டத் தொடரின் கடைசி நாளுக்கும், அடுத்த கூட்டத் தொடரின் முதல் நாளுக்கும் இடையில் உள்ள இடைவெளி யானது 6 மாத காலத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்று அரசியலமைப்பு சட்டத்தின் அம்சங்கள் கூறுகின்றன.

 அதாவது கூட்டத் தொடரில்  விவாதிப்பதற்கும், விவகாரங்களை ஆராய்வதற்கும் அதிக நேரம் ஒதுக்கப்பட வேண்டும். இதன்படி அரசு நிர்வாகம் இயங்கும் வகையில் பேரவை அலுவல்கள் அமைந்திருக்க வேண்டும். நிதி, பணம், திட்டமிடல், பட்ஜெட், செலவினம் மானியக் கோரிக்கைகள் ஆகியவை தொடர்பான விவாதங்களுக்கு எம். பி. எம்.எல்.ஏ.க்கள் அதிக நேரம் செலவிட வேண்டும். 

நாட்டின் நிதித் திட்ட அளவானது  1947_48_ல் வெறும் ரூ.278 கோடியாக இருந்தது. அது இப்போது 2013_24_ல் மிகப் பிரமாண்ட அளவில் ரூ.16 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ஜனநாயக அம்சம் மற்றும் மக்கள் பிரச்சனைகள் குறித்து அரசு சாரா அமைப்புகளுடனும், சமூக ஆர்வலர்களுடனும் அரசு பேச்சு வார்த்தை நடத்துவது மிகவும் அவசியம் என்றார் பிரணாப் முதகர்ஜி. 

      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்