முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் தேர்தல் நடத்த பிரதமரை வலியுறுத்த சாமி கோரிக்கை

புதன்கிழமை, 23 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,அக்.23 - லோக்சபைக்கு முன்கூட்டியே தேர்தல் பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்த வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ள சுப்பிரமணியசாமி கேட்டுக்கொண்டுள்ளார். 

லோக்சபைக்கு அடுத்தாண்டு மே மாதம் தேர்தல் நடக்க உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக உள்ளன. இந்தநிலையில் லோக்சபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த பிரதமரை ஜனாதிபதி கேட்டுக்கொள்ள வேண்டும் என்றார். பிரதமர் மன்மோகன் சிங் ஒரு ஒரு நியமன பிரதமர். அவர், வெளிநாடுகளுக்கு சென்று பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்துப்போட மட்டும் உள்ளார். இதனால் நாட்டிற்கு அதிக பலன் ஏற்படப்போவதில்லை என்று சுப்பிரிமணியசாமி கூறினார். 

நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துவிட்டன. ஒரு கிலோ வெங்காய விலை மீண்டும் ரூ.100 ஐ தாண்டும் அளவுக்கு உள்ளது. இதர அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர்ந்துவிட்டது. அதனால் லோக்சபையை கலைத்துவிட்டு விரைவில் தேர்தல் நடத்த மன்மோகன் சிங்கை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வலியுறுத்த வேண்டும் என்று சுப்பிரமணியசாமி மேலும் கூறினார். லோக்சபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தினால் நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமடைவதை தடுத்து நிறுத்தலாம். ரூபாய் மதிப்பு அடியோடு சரிந்துவிட்டது. இதற்கும் விலைவாசி உயர்வுக்கும் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளும் எங்கும் இல்லாத ஊழல்களும்தான் முக்கிய காரணமாகும் என்று சுப்பிரமணியசாமி கடுமையாக கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்