முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊடுருவல் அதிகரிப்பு குறித்து கவலை: ஷிண்டே

புதன்கிழமை, 23 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

சம்பா, அக்.23 - இந்தாண்டு தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்திருப்பது குறித்து மத்திய அரசு பெரும் கவலை அடைந்துள்ளது என்று உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். 

கடந்த 8 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு ஜம்மு_காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகமாக உள்ளது. மேலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்தத்தை மீறி இந்தாண்டு 136 தடவை அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 9 நாட்களில் மட்டும் 26_க்கும் மேற்பட்ட தடவைகள் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் எல்லையில் நிலவும் நிலைமை குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே நேற்று ஜம்மு பகுதியில் உள்ள சம்பா பகுதிக்கு சென்றார். எல்லையில் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறலில் ஈடுபட்டுக்கொண்டியிருந்ததால் அமைச்சர் ஷிண்டாவால், எல்லையையொட்டி செல்ல முடியவில்லை. இதனையொட்டி சம்பாவில் நடைபெற்ற கூட்டத்தில் எல்லைப்பாதுகாப்பு படையினர் மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படையினர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் இந்தாண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகமாக உள்ளது. இதனால் மத்திய அரசு பெரும் கவலை அடைந்துள்ளது. இருந்தபோதிலும் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுத்து நிறுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எல்லையில் பாதுகாப்பு மற்றும் ராணுவ வீரர்கள் உஷாராக வைக்கப்பட்டுள்ளனர் என்றார். மேலும் மத்திய போலீஸ் ஆயுதப்படையினருக்கு ராணுவத்தினர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் என்று ஷிண்டே அறிவித்தார். எல்லையை கட்டிக்காப்பது பெரும் சிரமம். அதனை கருத்தில் கொண்டுதான் அவர்களின் குறைகளை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஷிண்டே மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago